News July 7, 2025
அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி: திருமா

அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் கூட அது பொருந்தாக் கூட்டணியாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் மனமொத்து களப்பணி ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றார். பொருந்தாக் கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறுவது நேர் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
Similar News
News September 8, 2025
பறிபோகிறதா பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனின் பதவி?

TN சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது ஏன் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில், அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு SC ஆணையிட்டுள்ளது. மேலும், UPSC-ன் பரிந்துரை அடிப்படையில் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
News September 8, 2025
அரை முழம் பூவுக்கு ₹1.14 லட்சம்.. அதிர்ந்த நவ்யா நாயர்!

விமான நிலையத்திற்கு அரை முழம் பூ வைத்து கொண்டு வந்ததால், நடிகை நவ்யா நாயருக்கு ₹1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளிலிருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு, இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இருந்தாலும், அரை முழத்துக்கு ₹1.14 லட்சம் கொஞ்சம் ஓவர்தான்!
News September 8, 2025
டிடிவியின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து அமமுக விலக, தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் தலைவராக EPS-ஐ, தான் அறிவிக்கவில்லை என்றும், பூத் கமிட்டி கூட்டத்தில் EPS முதலமைச்சராக வேண்டுமென அண்ணாமலை தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் டிடிவிக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.