News July 7, 2025
தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு

தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 8 மணியிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பை தாண்டக் கூடாது என்ற விதிமுறையும் நடைமுறையில் இருக்கும்.
Similar News
News September 8, 2025
அரை முழம் பூவுக்கு ₹1.14 லட்சம்.. அதிர்ந்த நவ்யா நாயர்!

விமான நிலையத்திற்கு அரை முழம் பூ வைத்து கொண்டு வந்ததால், நடிகை நவ்யா நாயருக்கு ₹1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளிலிருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு, இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இருந்தாலும், அரை முழத்துக்கு ₹1.14 லட்சம் கொஞ்சம் ஓவர்தான்!
News September 8, 2025
டிடிவியின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து அமமுக விலக, தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் தலைவராக EPS-ஐ, தான் அறிவிக்கவில்லை என்றும், பூத் கமிட்டி கூட்டத்தில் EPS முதலமைச்சராக வேண்டுமென அண்ணாமலை தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் டிடிவிக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News September 8, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது செய்யப்படுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிராஜ் கான் என்ற அந்த நபர், இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்த ராணுவம், அவரிடம் இருந்து பாகிஸ்தான் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.