News July 7, 2025

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

image

குறுவை சாகுபடி திட்டத்தில் இயந்திர நடவு மூலம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு அரசு மானியமாக ரூ.4000 வழங்க உள்ளது. எனவே இயந்திர நடவு மேற்கொண்டுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய உடனடியாக உழவர் செயலி அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்து மானியம் பெறலாம் என கொள்ளிடம் உதவி இயக்குனர் எழில் ராஜா தெரிவித்துள்ளார்.

Similar News

News July 7, 2025

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் துவங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News July 7, 2025

பொன்னியின் செல்வம் கதையை எழுதிய மயிலாடுதுறை எழுத்தாளர்!

image

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் மயிலாடுதுறையை சேர்த்தவர் ஆவார். மேலும் இவர் கல்கி என்ற புனைப்பெயரால் மிகவும் பிரபலமானவர். இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற புத்தங்கங்கள் மூலம் இன்றளவும் பலராலும் அறியப்படுகிறார். மேலும் இவர் இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் என்று கூறப்படுகிறது. பகிரவும்

News July 7, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வருகிற ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 130 முகாம்களின் நடைபெற உள்ளது. தன்னார்வலர்கள் மூலம் ஜூலை7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது. முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

error: Content is protected !!