News July 7, 2025
நாகையில் ஹவுஸ் வயரிங் இலவச பயிற்சி

நாகை புதிய கடற்கரை சாலை பகுதியில் உள்ள மத்திய அரசின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவசமாக ஹவுஸ் வயரிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேர 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! (<<16974210>>பாகம்-2<<>>)
News July 7, 2025
நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க! (<<16974190>>பாகம் 1)<<>>
News July 7, 2025
கார் மோதியதில் கணவன் மனைவி மகள் பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நீர்முளை பிரதான சாலையில் கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் மருதம்பட்டினத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் தனது மனைவி பெரியநாயகி 7 வயது மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.