News July 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News September 8, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வி; CM நச் பதில்

தனிப்பட்ட முதலீடுகளை செய்யவே CM ஜெர்மனி சென்றிருக்கிறார் என EPS சொன்னது சரிதான் என கூறிய CM ஸ்டாலின், பெரியார் கொள்கைகளை முதலீடு செய்து வந்துள்ளதை தான் அவர் அப்படி சொல்லியிருப்பார் என விளக்கமளித்துள்ளார். இதன் பின்பு, செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி பேசும் போது, அக்கப்போரான இந்த கேள்வி எதற்கு என பதிலளித்தார்.
News September 8, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.8) சவரனுக்கு ₹280 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் சவரனுக்கு ₹3,080 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,970-க்கும், சவரன் ₹79,760-க்கும் விற்பனையாகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 8, 2025
ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: CM

தமிழ்நாடு கொண்டுள்ள மனித வளம் குறித்து, தானே எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகதான் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாக CM ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதன் விளைவாக, தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து ஜெர்மனியின் 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடத்தியது போல ஒசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.