News July 6, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவுடனான கூட்டணி தற்காலிகமானதுதான் என அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா கூறியதற்கு <<16965259>>அண்ணாமலை கருத்து கூற மறுத்தது<<>> பேசுபொருளாகியுள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அண்ணாமலையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?
Similar News
News July 7, 2025
5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையாக குடையை உடன் எடுத்துட்டு போங்க. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News July 7, 2025
கேப்டன்ஷிப் ரெக்கார்ட்… சாதனை படைத்த கில்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், கேப்டன் கில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெளிநாட்டில் இளம் வயதில் டெஸ்ட் போட்டியை வென்ற வீரர் என்ற பெருமையை கில்(25 ஆண்டுகள் 297 நாட்கள்) பெற்றார். இதற்கு முன்னர் கவாஸ்கர் (26 ஆண்டுகள் 198 நாட்கள்) இச்சாதனையை செய்திருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் இந்தியாவின் பிரின்ஸ் என நிரூபித்து வருகிறார் கேப்டன் கில்.
News July 7, 2025
திருச்செந்தூரானை எப்போது தரிசித்தாலும் புண்ணியம்

‘சொல்ல சொல்ல இனிக்குதடா’ என்பதைப் போல முருகனை நினைக்க நினைக்க வாழ்வில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் மனம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற குடமுழுக்கால் குளிர்விக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று முதல் ஆக.5 வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாள்களில் பக்தர்கள் எப்போது தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்கின்ற புண்ணியம் கிடைக்கும். அரோகரா!