News July 6, 2025
திருவள்ளூர் வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6முதல்10 வரை திருவள்ளூர் மக்கள் இரவு 8மணி முதல் 8.06மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். இதை டக்குனு நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க!
Similar News
News July 7, 2025
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நீர்வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 32 அடியாக உள்ள ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி 73% நிரம்பியுள்ளது. விரைவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து மே 21 முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.
News July 7, 2025
திருத்தணியில் அலைகடலென பக்தர் கூட்டம்

திருத்தணியில் நேற்று (ஜூலை 6) ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தாம் படைவீடு முருகன் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். மூலவரை 3 மணி நேரம் காத்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. புதிய ஜெனரேட்டரும் சோலார் விளக்குகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. கோயிலிலும் நெரிசல் காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
News July 7, 2025
திருத்தணி கோயிலுக்கு ஜெனரேட்டர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர், கோயில் இணை ஆணையர் ரமணியிடம், எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.