News July 6, 2025
தர்மபுரி காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு நேரத்தில் மாவட்ட காவல்துறை சிறப்பு ரோந்து நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளராக ஆய்வாளர் திரு.ஜே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் இரவு பாதுகாப்பிற்கு தொடர்பு கொள்க.
Similar News
News August 21, 2025
தர்மபுரியில் இலவச சுயதொழில் பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள RSETI தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் கான்கிரீட் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு, உடை, பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்த பின்னர் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2025 மேலும் விவரங்களுக்கு: 04342230511, 6383147667ஐ தொடர்பு கொள்ளலாம்.
News August 21, 2025
மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி

தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 தொடா்பு கொள்ளலாம்.
News August 21, 2025
விநாயகர் சிலையை நிறுவ விண்ணப்பிக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.