News July 6, 2025

நாகை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்!

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாட்சியர் எண்கள்.
▶வேதாரண்யம்-04369-250457,
▶திருக்குவளை-04365-245450,
▶கீழ்வேளூர்-04366-275493,
▶நாகப்பட்டினம்-04365-242456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.!

Similar News

News August 21, 2025

நாகை கலெக்டர் கடுமையான எச்சரிக்கை

image

உவர் நீர் இறால் பண்ணைகளுக்கான பதிவுச் சான்றினை புதுப்பிக்காமல், நாகை மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். பதிவுச் சான்று பெறாமலும், பதிவினை புதுப்பிக்காமலும் இறால் வளர்க்கக்கூடாது என கலெக்டர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 21, 2025

பொதுமக்களுக்கு போலீஸ் சூப்ரண்ட் உறுதி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News August 21, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று (ஆக.20) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேதாரண்யம் சார் ஆட்சியர் அமீத் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!