News July 6, 2025
60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

‘Wakefit’ பெட் தயாரிப்பு நிறுவனம் நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.
Similar News
News July 7, 2025
பெரியவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்

உடல் ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி மிகவும் அவசியம், மேலும் இது பல நோய்களைத் தடுக்க உதவும். பெரியவர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (தோராயமாக 3 கிலோமீட்டர்) நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப இதை 4,000 முதல் 10,000 அடிகள் வரை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடைபயிற்சி தூரம் வேறுபடலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
News July 7, 2025
அதிமுக ஆட்சி..! அமித்ஷாவுக்கு பதிலளித்த EPS

தமிழகத்தில் தங்களது கூட்டணி ஆட்சி அமையும் என அண்மையில் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு அதிமுக உடன்படவில்லை என இபிஎஸ் இதுநாள் வரை தெளிவாக தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி சுற்றுப்பயணத்தை துவங்கும் இபிஎஸ் அதனை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய மடலில், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி: திருமா

அதிமுக – பாஜக கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் கூட அது பொருந்தாக் கூட்டணியாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் மனமொத்து களப்பணி ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றார். பொருந்தாக் கூட்டணியை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறுவது நேர் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தார்.