News April 5, 2024

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை ஏப்.6 ஆம் தேதி முதல் ஏப்.9 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மலை கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாளில் மழை பெய்தால் மலையேற செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

விருதுநகர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

விருதுநகர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

image

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

News February 6, 2026

ஸ்ரீவி: தனியார் பள்ளியில் முகமூடி திருடர்கள் கைவரிசை

image

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!