News July 6, 2025
பான் கார்டு எண் பற்றிய இந்த சீக்ரெட் தெரியுமா?

✦முதல் 3 எழுத்துக்கள்: A – Z என Random-ஆக தரப்படுவது ✦4-வது எழுத்து: இது ஒரு நபர் (அ) நிறுவனத்தின் வகையைக் குறிக்கும். (Ex.) P என்பது தனிநபர், C என்பது நிறுவனம், T என்பது அறக்கட்டளை ✦5-வது எழுத்து: கார்ட் வாங்குபவர் பெயரின் முதல் எழுத்து ✦6-வது முதல் 9-வது வரையான எண்கள்: 0001 – 9999 வரை Random-ஆக அளிக்கப்படுவது ✦10-வது எழுத்து: Check Digit எனப்படும் இதை பார்முலா மூலம் கணக்கிடுகின்றனர்.
Similar News
News July 7, 2025
2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.