News July 6, 2025
புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 6, 2025
புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் ▶வட்டாட்சியர் புதுக்கோட்டை-04322-221566, ▶விராலிமலை-04339-220777, ▶திருமயம்-04322-274223, ▶ஆவுடையார்கோயில்-04371-233325, ▶மணமேல்குடி-04371-250569, ▶இலுப்பூர்-04322-272300, ▶அறந்தாங்கி-04371-220528, ▶ ஆலங்குடி-04322-251223, ▶கந்தர்வக்கோட்டை-04322-275733. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News July 6, 2025
புதுகை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 6, 2025
புதுக்கோட்டையில் ஆதார் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 30 துணை அஞ்சலகங்களிலும் வரும் 16ஆம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் தபால் அலுவலகங்களில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள் மற்றும் ஆதார் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் தபால் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.