News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 23, 2025
29 பேருக்கு பணி ஆணை வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று(அக.22) சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வான 29 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார். இதில் வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 23, 2025
வாணியம்பாடியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் பகுதியில் நாளை (23-08-2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .
News August 22, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க