News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04146-226417) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962564>>தொடர்ச்சி<<>>

Similar News

News July 6, 2025

பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை அமல்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 6, 2025

அரகண்டநல்லூர்: வழிபறியியல் ஈடுபட்ட வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, கீழ்க்கொண்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவ்வழியாக வந்த நபரிடம் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசன் என்ற நபரை இன்று(ஜூலை 6) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News July 6, 2025

புதிய பாமக நிர்வாகிகள்: ஜூலை 8 செயற்குழு கூட்டம்

image

நேற்று (ஜூலை 5) பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு, 21 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த மாற்றங்களைச் செய்தார். இந்நிலையில், ஓமந்தூரில் ஜூலை 8 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாமக செயற்குழுக் கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!