News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 6, 2025
தர்மபுரி காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு நேரத்தில் மாவட்ட காவல்துறை சிறப்பு ரோந்து நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளராக ஆய்வாளர் திரு.ஜே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் இரவு பாதுகாப்பிற்கு தொடர்பு கொள்க.
News July 6, 2025
தருமபுரியில் பைக்கில் சென்ற பெண் லாரி மோதி பலி!

மொரப்பூர் சாலையில் இன்று (ஜூலை 6) முக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைவேந்தன் தனது மனைவி சசிகலா (28) மற்றும் இரு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து சசிகலா கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News July 6, 2025
தருமபுரிக்கு வருகை தந்த அமைச்சர்

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை (ஜூலை 7) காலை 9.00 மணிக்கு தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.