News July 6, 2025

புதுவை: வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

image

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920 வரை வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

புதுவை: விநாயகர் சிலை குறித்து கட்டுபாடுகள் விதிப்பு

image

விநாயகர் சிலை செய்பவர்கள் நகராட்சியிடம் அனுமதி பெற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சுற்றுச் சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி சிலை உற்பத்தி செய்ய வேண்டும் என புதுவை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்த நகராட்சி, காவல் துறையிடம் அனுமதி பெறுமாறு கூறியுள்ளார்.

News August 25, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

புதுவையில் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மூலம் வரும் வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்க (அ) ஏதேனும் சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930 & 0413–2276144 / 9489205246 தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

புதுவையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

image

இந்திய அரசின் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் தேசிய இயக்கம் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி காவல்துறை சார்பில், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஃபிட் இந்தியா சைக்கிள் பேரணி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி பேரணியை கொடியாசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் அமைச்சர் நமச்சிவாயம் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை நிறைவு செய்தார்.

error: Content is protected !!