News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 7, 2025
வீட்டுமனை விளம்பரத்திற்கு கட்டுப்பாடுகள்

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரித்துள்ளது. அதேபோல, 100க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றோ கவர்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை விதித்துள்ளது.
News July 7, 2025
சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிய அரசு சேவை முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ஜூலை 15 முதல் ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் தொடங்குகின்றன. தன்னார்வலர்கள் திங்கள்கிழமை முதல் வீடு வீடாக விண்ணப்பப் படிவங்களை வழங்குவார்கள். இம்முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சேவைகள் மற்றும் ஆவண விவரங்கள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
News July 7, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த <