News July 6, 2025

ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை !

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகாலா உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, நாளை (ஜூலை 7) சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News July 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

image

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News July 6, 2025

தொழில் நகரம் ராணிப்பேட்டை

image

ராணிப்பேட்டை, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் ராணிப்பேட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

அரக்கோணம் – சேலம் மெமு ரயில் ரத்து

image

அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு சேலம் செல்லும் பயணிகள் ரயில் (ஜூன்23-ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. காலை வேலைக்கு கல்லூரிக்கு செல்வோர் இந்த ரயில் மூலம் பயணித்தனர் வந்தனர். திடீர் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள் ஆகியுள்ளனர். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், இந்த ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

error: Content is protected !!