News July 6, 2025
கொரடாச்சேரி: டூவீலரில் இருந்து மயங்கி விழுந்தவர் பலி

கொரடாச்சேரி அருகே கீரந்தங்குடியைச் சேர்ந்தவர் காத்தையன் (61). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திருவரங்கநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் காத்தையனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு டூவீலரில் இருந்து மயங்கி கீழே விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News July 7, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 54 நகர்ப்புற முகாம்கள் 131 ஊரக முகாம்கள் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 15 திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி வட்டத்திலும்; ஜூலை 17ஆம் தேதி நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கூத்தாநல்லூர், பேரளம் பகுதியில் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
News July 7, 2025
திருவாரூர்: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி, தஞ்சை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <