News July 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 6 – ஆனி – 22 ▶ கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: ஏகாதசி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
Similar News
News July 6, 2025
ஜூலை 9 வரை வெப்பநிலை அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் பருவமழை குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று சென்னை, மதுரை, தஞ்சை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயில் (100 டிகிரி பாரன்ஹீட்) சதமடித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 9 வரை தமிழகத்தில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என IMD எச்சரித்துள்ளது. இதனால், வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே..!
News July 6, 2025
தேர்தல் வியூகம் தயார்! மாநாட்டு தேதியை அறிவித்த பாஜக

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது. காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இந்த மாநாடு உதவும் என பாஜக நம்புகிறது.
News July 6, 2025
ரஜினி & அஜித்துடன் நடிக்க ஆசை: ஷிவம் துபே

தனக்கு ரஜினிகாந்த் & அஜித்குமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என ஷிவம் துபே கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பட விழாவில் பேசிய அவர், மேற்கூறிய நடிகர்களுடன் நடிக்க ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது இரு நடிகர்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. முன்பு, சூர்யாவை ஃபேவரைட் ஹீரோவாக தல தோனி & சின்ன தல இருவரும் கூறியிருந்தனர்.