News July 6, 2025
நாகர்கோவில் எம்எல்ஏ கோரிக்கை நிறைவேறியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் “மினி டைடல் பார்க்” அமைப்பதற்காக
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி தமிழக சட்டமன்றத்தில்
21-03-2025 அன்று கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு பரிசீலனை செய்து அதற்கான ஒப்புதல்களை இன்று வழங்கி இருக்கிறது. இதைஅடுத்து எம்.ஆர்.காந்திக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
ஆதார் மூகாமில் 9000 பேர் பயன் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றது. இதில் ஒன்பதாயிரத்திற்கும் மேலான பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.
News July 6, 2025
கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் கடன்

குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில் ஆணையர் நிர்மல் ராஜ் பேசும் போது கைவினை தொழிலாளர்களுக்கு மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்படுகிறது என்றார். இதில் அதிகபட்சம் ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என்றார்.
News July 6, 2025
பி.எஸ்.என்.எல் தரை வழி மறு இணைப்பு மேளா

பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்பு பெற்று பணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு மறு இணைப்பு வழங்குவதற்கான மேளா ஜூலை.9 அன்று நாகர்கோவில் கோர்ட் ரோடு பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் பாக்கியை தள்ளுபடியுடன் செலுத்தி மறு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.