News July 5, 2025
உரிமைத்தொகை விண்ணப்பம்.. அரசு புதிய அறிவிப்பு

ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முகாம்களுக்கு செல்லும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கு செப்., முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News July 6, 2025
பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். இது, கூட்டணியிலிருந்து பாஜகவை கைகழுவும் முடிவோ? என பலரும் கருத்து கூறுகின்றனர்.
News July 6, 2025
உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★<
News July 6, 2025
SJ சூர்யா கேட்ட கேள்வி… யாராக இருக்கும்?

‘கில்லர்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வரும் SJ சூர்யாவின் பதிவு ஒன்று நெட்டிசன்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பதிவில் கிட்டார் ஒன்றுடன் துப்பாக்கி இணைந்திருக்கும் ஒரு ஸ்டில் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘Guess the killer composer’ என்றும் கேப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. பதில் வரும் 7-ம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாராக இருக்கும் என நீங்க நினைக்கிறீங்க?