News July 5, 2025
இரவு இங்கெல்லாம் மழை பெய்யும்: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊர் நிலவரம் எப்படி இருக்கு?
Similar News
News July 6, 2025
ஸ்டாலினுக்கு உத்வேகம் கொடுத்த ‘ஓரணியில் தமிழ்நாடு’

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் அடிமட்ட திமுக தொண்டர்கள் வரை வீடு வீடாக சென்று பரப்புரை செய்வதோடு, புதியவர்களை கட்சியிலும் இணைக்கின்றனர். கடந்த 2 நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்துள்ளனர். இது திமுக தலைமைக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதால், இந்த பரப்புரையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
News July 6, 2025
ஒரு டெஸ்டில் 2 சதம்… லெஜெண்டுகள் வரிசையில் கில்!

இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக ஒரு மேட்சின் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களையும் அவர் குவித்தார். இதற்கு முன்னதாக, 1978-ல் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கவாஸ்கர் 107, 182 ரன்களையும், 2014-ல் அடிலெய்டில் ஆஸி-க்கு எதிராக 115, 141 ரன்களும் குவித்திருந்தார்.
News July 6, 2025
ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 29-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 22 கேரட் 1 கிராம், ₹8,985-க்கும், சவரன் ₹71,440-க்கும் விற்பனையான நிலையில், இன்று(ஜூலை 6) 1 கிராம் ₹9,060-க்கும், ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களில் சுபமுகூர்த்தம் காரணமாக நகை விற்பனை அதிகரித்தால் விலை மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.