News July 5, 2025
பத்திரபதிவு அலுவலகத்தில் கூடுதல் டோக்கங்கள்

செங்கல்பட்டில் ஜூலை 7 அன்று சுப முகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்படும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். அன்று ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 100-ல் இருந்து 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-ல் இருந்து 300 டோக்கன்களும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய முடியும்.
Similar News
News July 6, 2025
தாம்பரத்தில் இன்று மின்தடை ஏற்படும்

தாம்பரத்தில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கீழே வரும் பகுதிகளில் கரண்ட் கட். தாம்பரம், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நாகா, அன்சா கார்டன். பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
செங்கையில் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்

பொறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஸ்வரன், தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 5) தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அப்போது பந்து அருகிலுள்ள விவசாய கிணற்றில் விழுந்துள்ளது. இந்த பந்தை எடுக்க முயன்ற ரிஷிகேஷ்வரன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News July 6, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைலில் ஆக்ஸிஜன், சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் சரிபார்க்கும் அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இச்செயலிகள் மூலம் கைரேகை நகலைப் பயன்படுத்தி ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து பண மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. சைபர் கிரைம் உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும்.