News July 5, 2025
சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.
Similar News
News July 6, 2025
ஏர்போர்ட்டில் பரவி வரும் மர்ம காய்ச்சல்

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் போலீசார் சிலருக்கு திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. சளி, இருமல், உடலில் அதிக வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது, கொரோனா பரவல் மற்றும் கேரளாவில் பரவி வரும் நிபா காய்ச்சலாக இருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு புகார்களும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உஷாரா இருங்க. ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
சைபர் மோசடி குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுரை

சென்னை பெருநகர காவல் துறை சைபர் மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடியில் சிக்கினால், உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும். மேலும், 1930 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். போலி இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாறாமல் இருக்க, அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News July 5, 2025
சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.