News April 5, 2024
ஓ.பன்னீர்செல்வத்தின் விடா முயற்சி

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல முறை முயன்று தோற்ற பின்னரும் அவருடைய நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டது. ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னத்தை கொடுத்துவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையிலும் ஓபிஎஸ் போராடி வருகிறார்.
Similar News
News April 21, 2025
பல்கலை. வேந்தராக கவர்னரே நீடிப்பார்: பரபரப்பு அறிக்கை

பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலக காய் நகர்த்தும் விசிக?

திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?
News April 21, 2025
அடுத்த சீசனுக்கு சிஎஸ்கேவை தயார் செய்வேன் – தோனி

சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்ததே MI உடனான தோல்விக்கு காரணம் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். லீக் சுற்றில் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப்-க்கு முன்னேற முயற்சிப்போம் என தெரிவித்த அவர், ஒருவேளை வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த சீசனுக்காக அணியை கட்டமைக்கும் பணியை தொடங்குவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே CSK வென்றுள்ளது.