News July 5, 2025
அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்

அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி சிறுவன் ரோகித் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் சம்பவத்தை அறிந்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை சிறுவனின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்த எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Similar News
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
கிருஷ்ணகிரியில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜய குமார் கூறியுள்ளார். சென்னையை அடுத்து இந்த சேவை கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறலாம் என தெரிவித்துள்ளார். *பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அருமையான திட்டம். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
News July 6, 2025
162 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார். அதில் பணிப்பெற்ற 162 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.