News July 5, 2025

நாளை தருமபுரி வழியாக ரயில்கள் இயக்கப்படாது

image

ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாரநாயக்கனஹள்ளி ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நாளை ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ரயிலில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News July 6, 2025

தர்மபுரி கலெக்டர் தெரிவித்த செலவு விவரங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-25ஆம் ஆண்டு வரை ரூ.18.09 கோடி மதிப்பீட்டில் 298 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், (NNT) 2021-25ஆம் ஆண்டுவரை ரூ.13.04 கோடி மதிப்பில் 228 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.52.45 கோடி மதிப்பீட்டில் 1959 பணிகள் நடைபெற்றது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

வீரர்களுக்கு நிதியுதவி: தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற, தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ளோர் <>இங்கு கிளிக் செய்து <<>> விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ஜூலை 31, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிர்நது உதவுங்கள்*

News July 5, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துப் பணிக்கான அலுவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A. சிவராமன் அவர்கள் இந்த இரவு ரோந்து பணிக்கு பொறுப்பாக உள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்காக அனைத்து ரோந்து அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.

error: Content is protected !!