News July 5, 2025
வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் சேலம், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News July 5, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். இன்று (ஜூலை 5) நாமக்கல்- வேதபிறவி ( 9498167158) ராசிபுரம்- சுகவானம் ( 9498174815) திருச்செங்கோடு – மகாலட்சுமி ( 7708049200) வேலூர் – மனோகரன் ( 9952376488) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்
News July 5, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஜூலை 5) நாமக்கல்லில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.
News July 5, 2025
நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.