News July 5, 2025
மத்திய அரசில் 227 காலியிடங்கள்: ₹35,400 சம்பளம்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 227 Chargeman (Group B) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹35,400 – 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 18-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News December 8, 2025
விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News December 8, 2025
பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

‘பிறந்தநாள் வாழ்த்துகள், என் இதயமே’ என மறைந்த கணவர் தர்மேந்திராவை ஹேமமாலினி உருக்கமாக வாழ்த்தியுள்ளார். நீ என்னைவிட்டு சென்று 2 வாரங்களை கடந்த நிலையில், நொறுங்கி போன மனதை மெதுவாக ஒட்டவைத்து வருகிறேன். என்னுடன் எப்போதும் நீ இருப்பாய் என தெரியும். நம் சந்தோஷமான நினைவுகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நம் அழகான நினைவுகளுக்காவும், இரு அழகிய மகள்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என உருகியுள்ளார்.
News December 8, 2025
மீண்டும் பேட்டை சுழற்ற தொடங்கிய ஸ்மிருதி

பலாஷுடன் திருமணம் நிறுத்தப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த <<18495884>>ஸ்மிருதி மந்தனா<<>>, தனது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார். வரும் 21-ம் தேதி இலங்கைக்கு எதிராக டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்காக அவர் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஸ்மிருதி பயிற்சி பெறும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. சோகத்தில் முடங்கிவிடாமல் சிங்கப் பெண்ணாக அவர் ஜொலிப்பதாக நெட்டிசனகள் சிலாகித்துள்ளனர்.


