News July 5, 2025

பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (044-27423692) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

Similar News

News July 5, 2025

சிறந்த காவல் நிலையமாக அச்சரப்பாக்கம் தேர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் காவல் நிலையத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் செங்கல்பட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் அருகிலேயே சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது, காவல் நிலையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

News July 5, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜூலை.5) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. காவலர்கள் இன்றைய 10 மணி முதல் காலை 6 மணி வரை வந்து பணியில் ஈடுபடுவார்கள். அந்த சமயத்தில் ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருக்கவும்.

News July 5, 2025

பத்திரபதிவு அலுவலகத்தில் கூடுதல் டோக்கங்கள்

image

செங்கல்பட்டில் ஜூலை 7 அன்று சுப முகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்படும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். அன்று ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 100-ல் இருந்து 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-ல் இருந்து 300 டோக்கன்களும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய முடியும்.

error: Content is protected !!