News July 5, 2025

வத்திராயிருப்பு அருகே முதியவர் வெட்டிக் கொலை

image

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57) கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணமூர்த்திக்கும், இவரது மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தரம், அஜித்குமார் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணமூர்த்தியை அருவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

விருதுநகர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலைக்கு சீல்

image

வெம்பக்கோட்டை செவல்பட்டி ஸ்ரீ மகேஸ்வரன் பட்டாசு ஆலையில் வி. ஏ.ஓ. சீனிராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளை மரத்திற்கு அடியில் வைத்து தயாரித்த சிவகாசி சேர்ம சங்கரை (37) போலீசார் கைது செய்தனர். அதில் 55 பேன்சி ரக பட்டாசுகள், மிஷின் திரி மரப்பலகை, மூலப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர்.

News July 5, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

விருதுநகர் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!