News July 5, 2025
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 40 வருடம் கடுங்காவல் சிறை

பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 40 வருடம் சிறை தண்டனை (ம) ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நேற்று நீதிமன்ற உத்தரவிட்டது.
Similar News
News July 6, 2025
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கருத்துக்கள் வரவேற்பு

கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பில் கலந்து கொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் இது தொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் உண்மை நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். உடனே நீங்களும் உங்க பங்களிப்பையும் ஆதரவையும் தாருங்கள்.
News July 5, 2025
பெரம்பலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு நல்ல செய்தி!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தை (04328- 291595) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!