News April 5, 2024

தருமபுரி: மாம்பழம் ஏந்தி பிரச்சாரம்

image

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று(ஏப்.5) தருமபுரி ஒட்டப்பட்டியில் சௌமியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்தும், மாம்பழம் ஏந்தியும் வேட்பாளரை வரவேற்றனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Similar News

News March 14, 2026

தருமபுரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

‘அதிமுக-வை பாஜக கபளீகரம் செய்யும்’- து.முதல்வர் பேச்சு!

image

தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கவே மாநிலத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பீகாரைப் போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க-வை பா.ஜ.க கபளீகரம் செய்யத் துடிக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு நிதிஷ்குமார் நிலைதான் ஏற்படும்” என எச்சரித்தார்.

News March 14, 2026

தருமபுரி: இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு தற்கொலை

image

தருமபுரி மாவட்டம், மல்லாபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி (23), ஒருதலைக் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். தான் தூக்கிடும் காட்சியைச் செல்போனில் வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!