News July 5, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் இணைத்த கட்டணத் தொகையை செலுத்தலாம்.

Similar News

News July 5, 2025

நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

News July 5, 2025

வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் சேலம், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News July 5, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

error: Content is protected !!