News July 5, 2025

வங்கியில் வேலை! நல்ல சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

Similar News

News July 6, 2025

குழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அதில் வரும் கேரக்டர்கள் போல் தங்களை மாற்றி நடந்து கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்க கூடாது. பாடம் சார்ந்ததை மட்டும் சிறிது நேரம் பார்க்க அனுமதிக்கலாம். இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். (SHARE)

News July 6, 2025

கவியருவி இன்று முதல் திறப்பு

image

ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News July 5, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!