News July 5, 2025

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற ஜுலை 7ம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மதுரை, விருதுநகர், நெல்லை தென்காசி வழியாக வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News July 5, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

தூத்துக்குடி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். *உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க*

News July 5, 2025

தூத்துக்குடியில் பெண் கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

image

வாழவல்லானை சேர்ந்த திருமால் மனைவி தனலட்சுமி. இவருக்கும் சோமசுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி சோமசுந்தரத்திடம் 11 பவுன் நகை, 2 லட்சம் கொடுத்துள்ளார். இதை திருப்பி கேட்டதால் கடந்த 2014ல் குலசேகரப்பட்டினத்தில் உள்ள தோட்டத்தில் சோமசுந்தரம், நண்பர் அருண்குமாரும் தனலட்சுமியை கொலை செய்தனர். இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News July 5, 2025

தூத்துக்குடியில் புகார் எண் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கபட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுபடுத்தும் விதமாக கட்டணம் இல்லா தொலைபேசி 1800 2030401 என்ற எண்ணை மேயர் ஜெகன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!