News July 5, 2025
அதிமுக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு: கவுதமி

அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார். இதுகுறித்து நடிகை கெளதமி, தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்புக்காக திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் எல்லோரும் கை கோர்த்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என தவெகவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், சரியான திட்டமிடலுடன் இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News July 5, 2025
புதினாவுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

புதினாவை பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தலைவலி முதல் பாதங்களில் ஏற்படும் வலி வரை சரிசெய்ய புதினா உதவும். *அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் *நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சினையைச் சரிசெய்யும் *பெப்பர்மின்ட் ஆயில் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் * பெப்பர்மிண்ட் ஆயிலில் மசாஜ் செய்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
News July 5, 2025
நீரவ் மோடியின் தம்பி அமெரிக்காவில் கைது

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். நீரவ் மோடியின் மோசடியில் நேஹலுக்கும் தொடர்புள்ளதாக கூறி இந்திய அதிகாரிகள் அளித்த நோட்டீஸில் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி, 2018-ல் இந்தியாவில் இருந்து தப்பிய நிலையில், லண்டனில் 2019-ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
News July 5, 2025
டாக்டரின் அலட்சியம்… ஆணுறுப்பை இழந்த இளைஞர்!

அசாமில் சிகிச்சைக்காக சென்ற இளைஞரின் ஆணுறுப்பை டாக்டர் தவறுதலாக அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிகுர் ரஹ்மான்(28) என்பவருக்கு ஆணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டதால், அதை பரிசோதிக்க சிறிது சதையை எடுப்பதற்கு பதிலாக ஆணுறுப்பையே அகற்றிவிட்டார் டாக்டர். மயக்கம் தெளிந்த பிறகே இளைஞருக்கு உண்மை தெரிந்துள்ளது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என ரஹ்மான் வேதனையில் இருக்கிறார். ரொம்ப பாவம்..!