News July 5, 2025
ஜூலை 7 (திங்கள்கிழமை) பொது விடுமுறை இல்லை!

மொஹரம் பண்டிகைக்கு ஜூலை 7(திங்கள்கிழமை) பொது விடுமுறை என சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு மொஹரம் பண்டிகை நாளை(ஜூலை 6) கொண்டாடப்படுவதாகவும், இதனால், ஜூலை 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை எனப் பரவும் தகவலில் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம் ஜூலை 7 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும்.
Similar News
News July 5, 2025
அதிமுக பற்றி ஏன் விஜய் பேச மறுக்கிறார்? திருமா கேள்வி

தவெக செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என விஜய் தெரிவித்தார். இது பற்றி பேசிய திருமா, திமுக பற்றி பேசிய விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன் என தெரியவில்லை என்றார். த.வெ.க.வின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர கொள்கை எதிரியாக குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.
News July 5, 2025
என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன்: EPS

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தொடங்கிவைத்த ஸ்டாலினிடம் ‘இபிஎஸ் வீட்டிற்கு செல்வீர்களா’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிச்சயம் செல்வன் என்று பதிலளித்தார். இன்று இதுகுறித்து இபிஎஸ்ஸிடமும் செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பினர். அதற்கு, என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
News July 5, 2025
நானே முதல்வர் வேட்பாளர்… அமித்ஷாவுக்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பல முரண்பட்ட கருத்துகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் தேஜகூ ஆட்சியமைக்கும் எனக்கூறிய அமித்ஷா, முதல்வர் இபிஎஸ் தான் எனக் குறிப்பிடாதது சர்ச்சையானது. இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அமித்ஷாவிற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.