News July 5, 2025
இன்று இதை செய்தால் நன்மை உறுதி!

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று(ஜூலை 5) சனிக்கிழமை பூஜையில் பங்கேற்று, துளசி மாலை அணிவித்து பெருமாளை தரிசித்தால், சனி தோஷம் நீங்கி வாழ்க்கையின் பெரும் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்குமாம். மேலும், இன்றைய நாளில் அருகேயுள்ள ஏதேனும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வாழ்வின் குழப்பங்கள் நீங்கி நன்மை அடையலாம் என்கிறார் பக்தர்கள். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News July 5, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகர் மையப்பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
News July 5, 2025
நாமக்கல்லின் அடையாளமான ஜோதி தியேட்டர்

ஒவ்வொரு ஊர் மக்களின் சந்தோஷம், துக்கம், கொண்டாட்டம் என அனைத்து உணர்ச்சிகளையும் தாங்கி நிற்பவை அங்குள்ள திரையரங்கங்கள். அந்த வகையில், ஜோதி தியேட்டர் சுமார் 71 ஆண்டுகளாக 70 அடி உயரத்தில் நாமக்கல்லின் அடையாளமாகத் திகழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. என்.எஸ்.கே காலம் முதல் அஜித் – விஜய் காலம் வரை பல தலைமுறைகளைக் கடந்த இந்தத் தியேட்டரில் உங்களது நினைவுகளை கமெண்ட் பண்ணுங்க!(SHARE IT)
News July 5, 2025
பள்ளி, கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.