News July 5, 2025

புதுக்கோட்டை: பெண் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அழகன்வயலை சேர்ந்தவர் சத்யபிரியா (26). இவருக்கு திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று மணமேல்குடி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திய பிரியாவின் தந்தை அளித்த புகாரில் மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

புதுகை: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(17). வேளாண்கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததோடு கைப்பேசியையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 6, 2025

புதுகை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

image

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே CLICK செய்க<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 6, 2025

புதுகை: கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சிறு வலத்தூர்-கருப்பன் கோவில் பூசாரி தங்கவேல் தேவர் (55) கோவில் மைக் போடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமத்து பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இது குறித்து ஜெகதாபட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!