News July 5, 2025
எடுத்த காரியத்தில் வெற்றி பெற…

எந்த விஷயத்திலும் வெற்றி பெற, அனுமனின் அனுக்கிரகம் வேண்டும். சனிக்கிழமை மட்டுமின்றி, தினமும் 21 முறை இந்த அனுமன் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள்.
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே.
அர்த்தம்: ‘ராமனின் தூதனாகிய, மிகுந்த வீரமுள்ள, ருத்ரனின் சக்தியுடன் பிறந்த, ஆஞ்சநேயரே, வாயு புத்திரனே, உமக்கு வணக்கம்.
Similar News
News July 5, 2025
விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News July 5, 2025
தனிமையில் வாட வேண்டாமே…

போன் நோண்டவே டைம் பத்தாத இன்றைய இளம் ஜெனரேஷன், தனிமையில் தான் வாடுகின்றது. நேரடி பந்தபாசம் கிடைக்காமல் தனிமையில் தவிப்பதால், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 100 பேர் இறப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் டைம் ஒதுக்கி நண்பர்களுடன் நேரில் சென்று பேசி சிரித்து மகிழுங்கள். வீட்டிலும் அன்பு பாராட்டுங்கள். ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்விடும். இதற்கு முதலில் போனை கொஞ்ச நேரம் தூரம் வையுங்க!
News July 5, 2025
பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.