News July 5, 2025
காதலிக்கு ‘நோ’.. மாணவி முகத்தில் கத்தி கீறல்!

+2 மாணவி ஒருவரை காதலிக்க மறுத்ததால், அவரது முகத்தில் பேனா கத்தியால் கிழித்த இளைஞர் இளைஞரை போலீஸ் தேடி வருகிறது. விருத்தாசலத்தில், ஒரு வருடமாக பின்னால் அலைந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் அருள்குமார். இந்நிலையில், இன்று பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தபோது இந்த கொடூரத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Similar News
News July 5, 2025
பரிதாபமான நிலையில் திமுக: இபிஎஸ்

வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு கட்சியில் சேர வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவில் சேருங்கள் என வீடு வீடாக போய் கேட்கும் அளவுக்கு திமுக வந்துவிட்டது. இதுவே அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி தான் என்று தெரிவித்தார்.
News July 5, 2025
இந்த வார்த்தையை உங்களால் கூற முடியவில்லையா?

‘ஊருக்கு போனா அங்கேயே இருந்திடலாம் போல இருக்கு’ என வெளியூர்களில் இருக்கும் சிலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த வார்த்தைகளைக் கூட கூற முடியாமல் பலர் உள்ளனர். இதற்கு கடன், பண நெருக்கடி, ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் என காரணங்கள் இருக்கலாம். ஆனால், துயரங்கள் உங்களை சூழ்ந்தாலும் மனதில் சிறு புன்னகையை எப்போதும் வைத்திருங்கள். வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழுங்கள்.
News July 5, 2025
5 வருஷத்தில் 785 கணவர்கள் கொலை: ஷாக்கிங் ரிப்போர்ட்

ஹனிமூனில் கொல்வது, கண்களில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் காலை வைத்து மிதித்து கொள்வது என மனைவிகள் கணவர்களை கொல்லும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன. இதில் ஷாக்கிங் தகவல் என்னவென்றால், உ.பி., பிஹார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ம.பி.,யில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் இப்படி 785 கணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என NCRB டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கொலைகள்?