News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.
Similar News
News July 5, 2025
FLASH: விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்

திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக தேர்தல் பரப்புரை <<16950638>>லோகோவை வெளியிட்டு<<>> பேசிய அவர், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் தங்களுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா?
News July 5, 2025
மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: சிராஜ்

பும்ரா இல்லாததால் பவுலிங்கில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை அவர் அதிரடியாக வீழ்த்தினார். இதனையடுத்து பேசிய அவர், ஆகாஷ் தீப் & பிரசித் ஆகியோர் ஒருசில டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளதால், பவுலிங்கில் பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இப்படியான பொறுப்புகள் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
News July 5, 2025
பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP