News July 5, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம்,பேரணாம்பட்டு,கே வி.குப்பம்,அணைக்கட்டு மற்றும் திருவலம் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று ( ஜூலை 4) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News December 8, 2025
வேலூர்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.8) காணொலிக் காட்சி வாயிலாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் பங்கேற்றனர்.
News December 8, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News December 8, 2025
வேலூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE


