News July 4, 2025

வேலூர் மத்திய சிறை மீது பறந்த டிரோன்!

image

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை வளாகத்தின் மீது நேற்றிரவு (ஜூலை 3) மத்திய சிறையை படம் பிடிப்பது போன்று டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதனை பிடிக்க சிறை அதிகாரிகள் முயன்ற போது டிரோன் பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய சிறை துறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

வேலூர் உதவித்தொகை பெற கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வாசிப்பாளர் உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

வேலூரில் இன்னைக்கு எங்கு எல்லாம் மின்தடை?

image

வேலூர் 110/11 KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பனியின் காரணமாக இன்று (ஜூலை 5) சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெம்பி, தோணிமேடு, செங்கனவரம், மாம்பாக்கம், மேற்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், மற்றும் கரணம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

வேலூர் திமுக பிரமுகரை வெட்டிய 2 பேர் சிறையில் அடைப்பு

image

வேலூர் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான பாலச்சந்திரன் நேற்றிரவு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த லத்தேரி போலீசார் (ஜூலை 4) விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) மற்றும் சீனிவாசனை (46) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!