News July 4, 2025
PF-ல் சேரும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

புதிதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் அறிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2 தவணைகளாக அதிகபட்சம் ₹7,500 வீதம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊழியரை சேர்க்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூப்பர் பிளானா இருக்கே…
Similar News
News December 7, 2025
புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News December 7, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News December 7, 2025
₹610 கோடியை பயணிகளிடம் திருப்பி கொடுத்த இண்டிகோ

விமான பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறிய இண்டிகோ சேவை, படிப்படியாக<<18496873>>இயல்பு நிலைக்கு<<>> திரும்பி வருகிறது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதுவரை ₹610 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரவுக்குள் பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இண்டிகோ உறுதி அளித்துள்ளது.


