News July 4, 2025
மாங்கல்ய வரம் அருளும் வேதபுரீஸ்வரர்

நாகப்பட்டினம் மாவட்டம் தேரழுந்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் வேதபுரீஸ்வரர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 6, 2025
நாகை: விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்?

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
நாகை: வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <
News July 6, 2025
நாகை – திருவாரூர் ரயில் சேவையில் மாற்றம்

கீழ்வேளூர் – திருவாரூர் இடையில் உள்ள ரயில்பாதையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தால் காரைக்கால் – நாகை – திருவாருர் இடையே ஆன பயணிகள் ரயில் ஜூலை 9 ந்தேதி முதல் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் – திருச்சி ரயில் வழக்கமான நேரத்தில் திருவாரூரில் இருந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.