News July 4, 2025
₹853 கோடி சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி

IIT கான்பூரில் பட்டம் பெற்றவர் திரபித் பன்சால். இந்திய வம்சாவளியான இவர், மெட்டா நிறுவனத்தின் AGI பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய ஆண்டு சம்பளத்தைக் கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆண்டுக்கு ₹853 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதற்கு முன்னதாக பெங்களூரு இந்திய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், கூகுள் & மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களிலும் அவர் பயிற்சிப் பணி பெற்றுள்ளார்.
Similar News
News July 5, 2025
வரலாற்றில் இன்று

1954 – பிபிசி தனது முதல் டிவி செய்தியை ஒளிபரப்பியது. 1971 – அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது. 1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது PM சுல்பிகார் அலி பூட்டோ பதவி இழந்தார். 1996 – குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது. 1998 – செவ்வாய்க் கோளுக்கு ஜப்பான் தனது முதலாவது விண்கலத்தை ஏவியது.
News July 5, 2025
தேசிங்கு ராஜா 2 டிரெய்லர்.. செதச்சிட்டீங்க போங்க…

விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த டிரெய்லர் எவ்ளோ தடவ பாத்தாலும் சிரிப்பே வரல என கமெண்ட் செய்து வருகின்றனர். வித்யாசாகர் இசை தவிர டிரெய்லரில் எதுவும் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றான தேசிங்கு ராஜா பெயரையாவது விட்டு வச்சிருக்கலாமே..!
News July 5, 2025
IND Vs BAN கிரிக்கெட் தொடர் மாற்றம்?

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஆக.17, 20 & 23-ல் ஒருநாள் மற்றும் 26, 29 & 31 ஆகிய நாள்களில் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அங்கு நிலவும் அரசியல் சூழலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி வங்கதேசம் செல்ல முடியாத நிலையில், ஏன் வங்கதேச அணியை இந்தியாவுக்கே அழைத்து கொல்கத்தா, ராஞ்சி போன்ற நகரங்களில் தொடரை நடத்தக்கூடாது என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.